அமெரிக்க மக்கள் மிகவும் வேதனை தரக்கூடிய வாரங்களை எதிர்கொள்வதற்கு தயராகவேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது மிகமிகவேதனையானதாகயிருக்கப்போகின்றது,மிகமிக வேதனையான இரண்டு வாரங்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மிகமோசமான நாட்களை எதிர்கொள்ள அமெரிக்க மக்கள் தயாராகவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ஒருவர் குறித்து ஆராய்ந்தேன் அவர் வயதானவர் பருமனானவர் ஆனால் மிகுந்த மனோவலிமையுடையவர் என தெரிவித்துள்ள டிரம்ப் அந்த நண்பர் தற்போது கோமா நிலையில் காணப்படுகின்றார் என தெரிவித்துள்ளார்.

நான் எனது நண்பர்கள் சிலருடன் பேசினேன் அவர்களால் தாங்கள் காண்பதை நம்பமுடியவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.