ஊரடங்குச் சட்டத்தை மீளப்பெறாது தொடர வேண்டும் - ஆலோசனை கூறுகிறது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் : காரணம் இது தான் !

Published By: J.G.Stephan

01 Apr, 2020 | 08:26 AM
image

(எம்.மனோசித்ரா)

உலக சுகாதார ஸ்தாபனம் வைரஸ் பரவல் குறித்து கட்டங்கள் பிரித்துள்ளமைக்கு அமைய இலங்கை (iii) a கட்டத்திலிருந்து (iii) b கட்டத்திற்கு அல்லது (iv ) கட்டத்திற்குள் செல்வதற்கான அவதான நிலைக்கு செல்லாமலிருப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளவற்றில் பல நடவடிக்கைகளை இலங்கையும் முன்னெடுத்துள்ளது. எனினும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிக்கையொன்றியை வெளியிட்டுள்ளது.


அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

அதற்கமைய இலங்கையில் 80 வீதம் சமூக இடைவெளி பேணப்படுகிறது. முழுமையாக ஒரு கிராமத்தை அல்லது நகரத்தை தனிமைப்படுத்தல், மிக அவதான மட்டத்திலுள்ள பிரதேசங்களை அடையாளப்படுத்தி தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்தல், ஏனைய பிரதேசங்களில் தற்காலிகமாக ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தல் என்ற 3 கட்டங்களில் சமூக இடைவெளி பேணப்படுகிறது.

சமூகத்தில் 80 வீத சமூக இடைவெளியை பேணுவதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றோம். அத்தோடு வங்கி சேவை, மருந்து மற்றும் உணவு உள்ளிட்ட சேவைகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும். அத்தோடு ஊரடங்கு சட்டத்தை மீறாமலிருப்பதற்கும், மாவட்டங்களுக்கு பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருளாதார சந்தை, மீன்பிடித்துறைமுகம், மெனிங் சந்தை மற்றும் தேயிலை விற்பனை நிலையம் போன்ற முக்கிய பொது இடங்களில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். அத்தோடு ஒவ்வொருவரும் தனிநபர் நலன் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டும்.

மேலும் முகக்கவசம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு முறையாகப் பின்பற்றினால் வைரஸ் பரவலில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதைத் தவிர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவர்.

எதிர்காலத்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மனித மற்றும் ஏனைய திறன்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அனுமதிப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான விசேட வைத்தியசாலைகள் நிறுவப்பட வேண்டும். இதற்கு சிறந்த இடமாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகத்தை நாம் பரிந்துரைக்கின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் அறிவித்துள்ளோம்.

அதே போன்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்களோ ஏனைய சுகாதாரத்துறை பணியாளர்களோ தொற்றுக்குள்ளானால் பாரிய மனிதவள குறைபாடு ஏற்படும். எனவே இது குறித்து முன்னரே தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும். இது வரையில் நீர்கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர, களுபோவில , றாகமை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் சில வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு சில பிரிவுகளும் முற்றாக மூடப்பட்டுள்ளன. இது போன்ற நிலைமை ஏனைய வைத்தியசாலைகளிலும் ஏற்பட்டால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பற்றாக்குறை ஏற்படக் கூடும். எனவே வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளித்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அத்தோடு வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை 15 நிமிடங்களில் கண்டறிவதற்காக ஏனைய நாடுகளில் மேற்கொள்ளப்படும்  (ரபிட் டெஸ்ட்) Rapid Test  பரிசோதனை முறைமையை இலங்கையிலும் அறிமுகப்படுத்தினால் மிகச் சிறந்ததாக அமையும்.  இதன் மூலம் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களில் உண்மையில் தொற்றுக்குள்ளானவர்களையும் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களையும் இணங்காண முடியும்.

மேலும் சிகிச்சைக்கான மருந்துகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்குள் க்ளோரோக்வின் (Hydroxy Chlroquine) என்ற மருந்தை பயன்படுத்துவது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தோடு எனிகன் (AVIGAN) எனப்படும் மருந்து பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04