கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்று காரணமாக ஆசியாவில் 11 மில்லியன் மக்கள் வறுமைமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

உலக வங்கி தனது அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.

ஆசியா மிக நீண்ட கால பொருளாதார மந்த நிலைக்குள் தள்ளப்படும்,இரண்டு தசாப்காலத்தில் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை அமெரிக்கா சந்திக்கலாம் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தின் பொருளாதார வீழ்ச்சி 2.1 வீதமாக வீழ்ச்சியடையும்,ஆசியாவின் பொருளாதாரம் 0.5 வீதமாக வீழ்ச்சியடையலாம் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2.3 வீதமாக வீழ்ச்சியடையலாம் எனவும் தெரிவித்துள்ள உலக வங்கி சீனாவின் பொருளாதார வளர்ச்சி 0.1 ஆக குறைவடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

உலகின் அனைத்து நாடுகளும பொருளாதார துயரத்தினை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாதது என குறிப்பிட்டுள்ள உலக வங்கி  முழு ஆசிய பசுவிக் பிராந்தியமும் மிக மோசமான தாக்கத்தை எதிர்கொள் தயாராகவேண்டும் என தெரிவித்துள்ளது.