துருக்கிக்கான இயற்கை எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

இன்று காலை துருக்கியுடனான ஈரானின் பசர்கன் எல்லைக்கு அருகே உள்ள துருக்கிக்கான இயற்கை எரிவாயுவை விநியோகம் செய்யும் குழாய் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டு, சேதப்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாகவே இயற்கை எரிவாயு விநியோகமானது இவ்வாறு தடைப்பட்டுள்ளதாக ஈரானிய எரிவாயு கூட்டுறவு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக துருக்கிய எல்லைக் காவலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Photo Credit : aljazeera