கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 9 ஆம் திகதி வரை இடம்பெறவிருந்தது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த போட்டி ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அதாவது அடுத்த ஆண்டு (2021) கோடை காலத்திற்கு முன்பாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதன் ஆரம்ப திகதி தொடர்பான அறிவித்தல்கள் தெரிவிக்கப்படாத நிலையில் அதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன. 

இந் நிலையிலேயே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை 2021 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பித்து, ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவிருந்த போட்டிகளுக்காக டிக்கெட் வாங்கியவர்கள் அதனை அடுத்த ஆண்டு உபயோகித்துக் கொள்ளலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.