ஈரான்  நட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,111 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளார்கள்.

தற்போது அந்நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,606 ஆக அதிகரித்துள்ளதாக, இன்று செவ்வாய்க்கிழமை ஈரானிய அரச தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் 141  இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், ஈரானின் இறப்பு எண்ணிக்கை 2,898 ஆக அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து இதுவரை 14,656 நோயாளிகள் குணமடைந்து வெளியேறியுள்ளதுடன், மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3,703 நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.