இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 129 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளதுடன், ‍16 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள நிலையில் இலங்கையில்  "கொவிட் -19"கொரோனா நோய் பரவல் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரிக்கலாம் என  வைத்திய பரிசோதனை சபையின் பணிப்பாளர் வைத்தியர் ஜெயருவான் பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.