(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்படையினரால் கடந்த 28 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இலங்கையின் தென் கடற்கரையிலிருந்து சுமார் 463 கடல்மைல் தொலைவில் போதைப் பொருள் கடத்திலில் ஈடுபட்ட படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த வெளிநாட்டு படகிலிருந்து 500 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருள், கொக்கைன் என்று சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் 500 கிலோ கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

அத்தோடு பாபுல் எனப்படும் போதைப்பொருள் 200 பக்கட்டுகள் மற்றும் 100 கிராம் அளவிலான பிரிதொரு போதைப்பொருள் என்பனவும் மீட்க்கப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 12,500 மில்லியன் ரூபாய் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெளிநாட்டுப் படகு மேலதிக சோதனைகளுக்காக திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்த படகுடன் சேர்த்து கடந்த இரண்டு மாதங்களுக்குள் இது போன்ற மேலும் இரு படகுகள் இணங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.