விஜய்க்கு திரை பிரபலங்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் மொட்டை ராஜேந்திரனும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடுகின்ற விஜய்க்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வில்லனாக அறிமுகமாகி தற்போது காமெடியால் ரசிகர்களை கவர்ந்து வரும் மொட்டை ராஜேந்திரன் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

மொட்டை ராஜேந்திரன் கூறும்போது, ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால், ஒரே ஒரு இளைய தளபதி அது விஜய்தான். என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘தெறி’ படத்தில் விஜய் பொலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு டிரைவராகவும், உதவியாளராகவும் மொட்டை ராஜேந்திரன் நடித்திருந்தார். இதில் விஜய், மொட்டை ராஜேந்திரன் காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.