கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் குணமடைந்த நிலையில் இன்றைய தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இதன் மூலம் இலங்கையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த 16 பேர் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த இருவரும் தேசிய தொற்று நோய் மற்றும் முல்லேரியா வைத்தியாலைகளிலிருந்தே குணமடைந்து வெளியேறியுள்ளனர். 

இதுவரை இலங்கையில் 13 மாவட்டங்களில் 122 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை நாட முழுவதும் 4 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 173 நபர்கள் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் தனிமைப்படுத்தப்பட்டு, காண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு சுட்டிக்கட்டியுள்ளது.