காத்தான்குடி பொலிஸ் பிரிவின் ஆரையம்பதி பிரசேத்திலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது நேற்றிரவுரவு ஆரையம்பதி பிரசேத்தின் அமரசிங்கம் வீதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த சிலர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இதனால் காயமடைந்த மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கே.சந்திரகுமார்(56), எஸ்.பரமேஸ்வரி(46), எஸ்.புவி (20) ஆகியோரே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்குள்ளானவர்கள் மீது ஏற்கனவே சிலரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும் அது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளானவர்கள் தெரிவித்தனர்.

ஆரையம்பதி பிரசேத்திலுள்ள அரசியல் வாதியொருவரின் சகாக்களே இந்த தாக்குதலை நடாத்தியதாகவும் அவர்களே தொடர்ந்து தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் தாக்குதலுக்ககுள்ளானவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

(ஜவ்பர்கான்)