கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரசால் நீர்கொழும்பில் நேற்று (30.03.2020) உயிரிழந்தவரின் உடல் நள்ளிரவு 12.30 மணிக்கு தகனம் செய்யப்பட்டுள்ளது.

 இதனை நீர்கொழும்பு மேயர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த நபரின் இறுதிக்கிரியைகள் நீர்கொழும்பு மாநகர சபை பொது மயானத்தில் இடம்பெற்றிருந்தது.

நீர்கொழும்பு, போரதொட்டை பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் என்டன் பெர்ணான்டோ தெரிவித்திருந்தார்.

குறித்த தொற்றாளர் முதலில் நீர்கொழும்பு பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலேயே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பின்னர் அங்கிருந்து நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே நீர்கொழும்பு வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் என்டன் பெர்ணான்டோ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.