கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதால் களுபோவிலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மூடப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 15 நோயாளர்களும் அதில் கடமையாற்றிய 20 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், களுபோவிலை வைத்தியசாலையின் 5 ஆம் இலக்க சிகிச்சைப் பிரிவின் பணிக் குழுவினரே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நீர்கொழும்பு வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் நேற்றையதினம் உயிரிழந்ததையடுத்து நீர்கொழும்பு வைத்தியசாலையின் 20 ஆம் இலக்க சிகிச்சைப் பிரிவும்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.