படுகொலைக் குற்றவாளியான படைவீரர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றமை இலங்கையில் பொறுப்புக்கூறல் தொடர்பான நம்பிக்கைகளை சிதறடித்துவிட்டது என்று இந்தியாவின் பிரபல தேசிய ஆங்கிலத் தினசரிகளில் ஒன்றான 'த இந்து" கூறியிருக்கிறது.

மிருசுவில் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ வீரருக்கு கடந்த வாரம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருப்பது குறித்து 'அரசியல் மன்னிப்பு : இலங்கைப் படைவீரரின் விடுதலை குறித்து" என்ற தலைப்பில் அந்தப் பத்திரிகை நேற்று திங்கட்கிழமை தீட்டிய ஆசிரியர் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

எட்டு தமிழ் கிராமவாசிகளைக் கொலை செய்தமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் படைவீரர் ஒருவருக்குக் கடந்த வியாழக்கிழமை மன்னிப்பு வழங்கி விடுதலை செய்த ஜனாதிபதியின் செயல் கடந்தகாலக் குற்றங்களுக்காக அரசிடமிருந்து நீதியைக் கோரிக்கொண்டிருப்போர் மத்தியில் நியாயபூர்வமான சீற்றமொன்றை மூளவைத்திருக்கிறது. போர்க்கால அட்டூழியங்களுக்காகப் பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டிற்கு உதவூவதிலிருந்து விலகிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இலங்கையின் நீதித்துறையினால்இ நீதியை உத்தரவாதப்படுத்துவதற்குக் கிடைத்த நல்லதொரு சந்தர்ப்பத்தைப் பயனற்றுக்போகச் செய்திருக்கிறார்.

இலங்கையில் சிவிலியன்கள் மீதான தாக்குதுல்களுக்காகப் பல இராணுவவீரர்கள் கைது செய்யப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை. ஆனால் 'மிருசுவில் படுகொலைகள்" என்று அறியப்பட்ட அந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவப் பொலிஸார் சம்பந்தப்பட்ட இராணுவ வீரரை உடனடியாகவே தடுத்துவைத்துஇ அவர் சட்டத்திற்கு அகப்படாமல் தப்பக்கூடிய வாய்ப்பை இல்லாமல் செய்தனர். அந்தச் சம்பவத்தில் 5, 13, 15 வயதுடைய சிறுவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த கிராமவாசிகள் குழுவொன்று யாழ்குடாநாட்டில் மிருசுவில் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட தங்களது வீடுகளைப் பார்வையிடுவதற்காக 2002 டிசம்பரில் ஒருநாள் சென்றிருந்தனர். அவர்கள் சில இராணுவ வீரர்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுவிட்டது. 

அந்த இராணுவ வீரர்கள் கிராமவாசிகளின் கண்களைக் கட்டி அழைத்துச் சென்றனர். பின்னர் அந்தக் கிராமவாசிகளின் சடலங்கள் கழுத்துகள் அறுக்கப்பட்ட நிலையில் மலசலக்குழி ஒன்றுக்குள் இருந்து கண்டறியப்பட்டது. இராணுவத்தினரின் அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிச்சென்ற ஒருவர் மாத்திரமே இராணுவப்பொலிஸாரை சம்பவ இடத்திற்கு அழைத்துவந்தார். அவரே பின்னர் இவ்வழக்கின் முக்கிய சாட்சியாக மாறினார்.

5 படைவீரர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுஇ 3 மேல்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட ட்ரயல் அட்பார் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டது. நீண்டகால விசாரணைகள் 2015 இல் முடிவிற்கு வந்து படைவீரர்களில் ஒருவரான சுனில் ரத்நாயக்க மாத்திரமே குற்றவாளியாகக் காணப்பட்டார். 

அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இலங்கையில் 1976 ஆம் ஆண்டின் பின்னர் மரணதண்டனைகள் நிறைவேற்றப்படுவதில்லை. மன்னிப்பளிப்பதற்கான அதிகாரத்தைப் பயன்படுத்துவதென்பது ஒரு கருணையின் அடிப்படையிலான செயலேயன்றிஇ  அரசியல் அல்லது தேர்தல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியல்ல. 

ஆனால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ 'போர் நாயகர்கள்" சிறைகளில் வாட ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்ற செய்தியை சிங்களவர்கள் மத்தியிலுள்ள தனது பரந்த ஆதரவாளர்களுக்கு அனுப்பியிருக்கிறார். 

போர்க்குற்றங்களுக்காகத் தங்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்று தமிழர்கள் உணர்வதாக இருந்தாலும் கூட போர் நாயகர்களை சிறைகளில் வாட தான் அனுமதிக்கப்போவதில்லை என்றும் இ அவ்வாறு நீதி வழங்கப்படும் சந்தர்ப்பத்திலும் கூட அதனை ஒரு பேனையின் கிறுக்கலால் இல்லாமற்செய்து விடமுடியூம் என்றும் அவர் உணர்த்தியிருக்கிறார்.

ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்தப்படவிருந்த பாராளுமன்றத்தேர்தல் உலகலாவிய கொவிட் - 19 வைரஸ் பரவலால் பிற்போடப்பட்டிருக்கும் நிலையில்இ இராணுவ வீரர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதியின் செயலில் ஒரு தேர்தல் கோணமும் இருக்கிறது. தேர்தலுக்கு முன்னதாக மன்னிப்பு வழங்கும் செயற்பாடுகள் தொடர்வதாக இருக்கக்கூடும். 

ஒரு குற்றவாளிக்கு மன்னிப்பளிப்பதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட வழக்கை விசாரணை செய்த நீதிபதியிடமிருந்து சட்டமாதிபரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி அறிக்கையொன்றைப் பெறவேண்டும். நீதியமைச்சரிடம் இருந்தும் விதப்புரையைப் பெறவேண்டும் என்றும் அரசியலமைப்பில் நடைமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அத்தகைய ஆலோசனையையோஇ விதப்புரையையோஇ சிபாரிசையோ பெறவேண்டியது கட்டாயமல்ல என்றே தோன்றுகிறது. 

உள்நாட்டில் தமிழ்த் தலைவர்கள் மற்றும் வேறு அரசியல்வாதிகளிடமிருந்து மாத்திரமல்ல: ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர்இ மனித உரிமைகள் அமைப்புக்களிடமிருந்தும் இதற்குக் கண்டனங்கள் கிளம்பியூள்ளன. படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு அவமதிப்பு என்று அவர்கள் சரியாகவே வர்ணித்திருக்கிறார்கள்.

 கொவிட் - 19 வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் நாடுகள் முழுக்கவனத்தையூம் செலுத்தியிருக்கும் நேரத்தில் வழங்கப்பட்ட இந்த மன்னிப்பு உள்நாட்டுப் பொறிமுறைகளின் ஊடாகப் பொறுப்புக்கூறலைக் கொண்டுவரமுடியூம் என்ற நம்பிக்கைகளுக்குப் பாரதூரமான பின்னடைவாக அமைகிறது.