கச்சதீவு விடயத்தில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்வது மோசடியான செயலாகும். இந்த விவகாரத்தில் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்வதற்கு பதிலாக, மத்திய அரசிடம் இணைந்து வலியுறுத்தியிருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

அவர் இது தொடர௭்பில் மேலும் தெமரிவித்தள்ளதாவது, கச்சதீவினை தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவர் முதல்வராக இருந்த போது இலங்கைக்கு தாரை வார்த்தார் என்று முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். கச்சதீவை இலங்கைக்கு அளித்த போது, முதல்வராக இருந்த கருணாநிதி, அதற்காக பெரியளவில் எதிர்ப்பை தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், ஒரு மாநில முதல்வருக்கு நாட்டின் ஒரு பகுதியை இன்னொரு நாட்டுக்கு அளிப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, முதல்வரின் அனுமதியின்றியும், பாராளுமன்றத்தில் விவாதிக்காமலும் தான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தார். தி.மு.க.வை ஆதரிப்பதற்காக நான் இதை சொல்லவில்லை. கச்சதீவு பிரச்சினையில் தி.மு.க.வை அ.தி.மு.க. குறை சொல்வதும். 

அ.தி.மு.க .இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தி.மு.க. குற்றஞ்சாட்டுவதும் மிகப்பெரிய மோசடியாகும். ஏனென்றால், இவர்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்வதற்கு பதிலாக, மத்திய அரசிடம் இணைந்து வலியுறுத்தியிருக்க வேண்டும். அதற்கான துணிச்சல் இல்லாததை தி.மு.க., அ.தி.மு.க.வின் செயல்கள் காட்டுகின்றன என்றார்.