(ஆர்.ராம்)

வன்னியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 206 பேரை நாளையதினம் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கு யாத்திரை சென்றிருந்தவர்கள் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு வன்னியில் உள்ள விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் முகாம்களில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்களை நாளைய தினம் காலை 6 மணியளவில் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை விமானப்படை முன்னெடுத்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் சுமார் 132 பேர் புனாணை மற்றும் தியத்தலாவை ஆகிய தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்து இருப்பிடங்களுக்கு அனுப்பட்டதோடு இதுவரையில் 1565 பேர் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பை நிறைவு செய்து சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.