யாழ்ப்பாணம், சிறைச்சாலையில் சிறு குற்றங்களுடன் தொடா்புடைய 197 கைதிகள் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

இவா்களில் 162 கைதிகள் கடந்த சில நாட்களில் பிணையில் விடுகிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றய தினம் 35 போ் யாழ். மேல் நீதிமன்றம் மற்றும் மல்லாகம் நீதிமன்றங்கள் ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டனா். 

இலங்கையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக சிறைச்சாலைகயில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறு குற்றங்க ளுடன் தொடா்புடையவா்களை பிணையில் விடுதலை செய்ய ஜனாதிபதி எடுத்துள்ள சிறப்பு நடவடிக்கையின் கீழ் நீதிம ன்றங்கள் ஊடாக இவா்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றாா்கள். 

மேலும் ஏற்கனவே நீதிமன்றங்கள் ஊடாக பிணையில் விடுதலை செய்யப்பட்டபோதும் பிணையை பூா்த்தி செய்யாமல் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவா்களும் இந்த 197 பேருக்குள் உள்ளடங்கியுள்ளனா். 

சிறைச்சாலையில் நெருக்கடியை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை ஊடாக மேலும் பலா் பிணையில் விடுவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.