கல்பிட்டி, முகத்துவாரம் பகுதியில் உள்ள கடற்படை முகாமில், கடற்படை அதிகாரியை சுட்டுக் கொலை செய்தமை மற்றும் மேலும் இருவரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடற்படை முகாமில் சேவையில் ஈடுபட்டு வந்த மேலும் ஒரு கடற்படை அதிகாரியே குறித்த துப்பாக்கிச் சூட்டை சனிக்கிழமை இரவு மேற்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில், அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந் நிலையிலேயே சந்தேக நபர் இன்றைய தினம் கல்பிட்டி கடற்படை முகாமில் சரணடைந்த பின்னர் கைதுசெய்யப்பட்டு, கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.