அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதியானது மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் பெறுமதியானது 192.50 என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை ரூபா இறுதியாக அமெரிக்க டொலருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை வீழ்ச்சியை சந்தித்தது. இதன்போது டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 191.99 ரூபாவாக காணப்பட்டது.

இதேவேளை மார்ச் மாதம் 17 முதல் 20 ஆம் திகதி வரை அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதியானது தொடர்ச்சியாக நான்கு நாட்கள் சரிவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.