கொரோனா வைரஸின் தாக்கம் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளதாக காணப்படுகின்றது.

இந்நிலையில், நாட்டில் நாளாந்த மின்பயன்பாட்டில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மணித்தியாலத்திற்கு 49-33 வரையிலான ஜிகாவேர்ல்ட் மின்பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளது.மேலும், நாடெங்கும் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கின் காரணமாக, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பாடசாலைகள் என்பன மூடப்பட்டுள்மையினாலேயே இவ்வாறு மின்பயன்பாட்டில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.