யாழ்ப்பாணம், கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 114 கிலோ சஞ்சாவுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் படகு மூலம் இந்தியாவில் இருந்து  கஞ்சா கொண்டு வருவதாக பளை  பொலிசாருக்கு கிடைத்த இரகசியத்  தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இத் தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் படகில் இருந்து கஞ்சா இறக்கும் போது 114 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்தனர்.

அத்துடன் குறித்த கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் படகின் இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டு பளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.