(செ.தேன்மொழி)

வெலிமட பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி வேடுவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விவசாய நடவடிக்கைகளுக்காக வாய்க்காலிலிருந்து நீரைப் பெற்றுக் கொள்வதற்காக தண்ணீர் மோட்டார் ஒன்றை இயக்கச் சென்ற போதே குறித்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

ராகல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய வேடுவ இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.