(ஆர்.ராம்)

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் எவையும் இன்றையதினமும் நடைபெறமாட்டாது என்று அறிவிக்கப்பட்டள்ளது.

கொழும்பு பங்குசந்தைக்கு இன்றையதினமும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, பிணை முறிகள் சந்தை மற்றும் வங்கிகள் அனைத்தும் இன்றையதினம் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இயலுமானவரையில் வாடிக்கையாளர்கள் இணையவழி மூலமான கொடுக்கல் வாங்கல்களை பேணுமாறும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.