எதிர்வரும் நாட்களில் அதிகளவானவர்கள்  மரணிக்கும் ஆபத்துள்ளதா  என செய்தியாளர்கள் இங்கிலாந்தின்  இங்கிலாந்திற்கான துணை தலைமை மருத்து  அதிகாரி ஜெனி ஹரிசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு அவர் ஆம் என்பதே பதில் என குறிப்பிட்டுள்ளார்.

பலரின் முன்னாள் நின்று கொண்டு பெருமளவானவர்கள் உயிரிழப்பார்கள் என  எதிர்பார்க்கின்றோம் என தெரிவிப்பது கடினமான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த உலகளாவிய நோய் தொற்று நாங்கள்  முன்னர் ஒருபோதும் சந்தித்திராதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரத்தில அல்லது இரண்டு வாரங்களில் பலர் பாதிக்கப்படலாம் என எதிபார்க்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நாங்கள் தற்போது முன்னெடுத்துள்ள சமூக தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடையலாம் என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கவேண்டும்,இறுக்கமாக விதிமுறைகளை பின்பற்றவேண்டும், என தெரிவித்துள்ள  அவர் தற்போது பின்பற்றும் விதிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி விட்டு பின்னர் என்னிடம் வந்து உயிரிழப்புகள் குறித்து கேளுங்கள் என தெரிவித்துள்ளார்.