எமக்கெதிராக யார் செயற்பட்டாலும் அவர்களை கொலை செய்வேன் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க  பிக்கு ஒருவரை அச்சுறுத்தியுள்ளதாக   பௌத்தர்களின் குரல் அமைப்பின் செயற்குழு உறுப்பினரான பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த  நாலக தேரர்,

ஜாதிக ஹெல உறுமயவில்  சம்பிக்க ரணவக்க, அத்துருலிய ரத்தன தேரர் என இரண்டு பிரதான பேய்கள் உள்ளன.  அமைச்சர் சம்பிக்க அச்சுறுத்தியமை தொடர்பில் நீதிமன்றம் செல்லவும் தயங்கமாட்டேன். அவருக்கு எதிரான ஆதாரங்களையும் வழங்கி சட்டநடவடிக்கை எடுப்பேன். இதனை ஒரு தேரர் என்ற வகையில் சமூக பொறுப்புடன்  கூறுகின்றேன் என்றார்.