பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவின் விமானநிலையத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

ஜப்பானில் சிக்குண்டுள்ள பிலிப்பைன்சை சேர்ந்த நோயாளியை அங்கிருந்து அழைத்து வருவதற்காக புறப்படவிருந்த  விமானம் புறப்பட ஆரம்பித்த சில நிமிடங்களில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. 

மனிலாவின் நினோ அகியுனோ விமானநிலையத்திலிருந்து புறப்படுவதற்கு  விமானம்  தயாராகயிருந்த  வேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஒடுபாதைக்கு செல்வதற்கு முன்னர் விமானம் தீப்பிடித்துள்ளது.

ஜப்பானிற்கு மருந்துகள் மருத்துவ உபகரணங்களுடன் புறப்பட்ட விமானமே விபத்திற்குள்ளாகியுள்ளது.

விமானத்திலிருந்த எவரும் உயிர்பிழைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.