28 வயதான பிரிட்டன் குத்துச் சண்டடை வீரர் அன்டனி யார்ட், தனது தந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

குறித்த தகவலை அன்டனி யார்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளார்.

அத்துடன் அந்த பதிவில் உலகெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் அனைவரையும் வீட்டிலேயே இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.