உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை(29.03.2020) காலை குணமடைந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மேலும் ஒருவர் தற்போது குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரையில் மொத்தமாக 11 பேர் குணமடைந்துள்ளதுடன் 103 சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

இந்நிலையில், இலங்கையில் மொத்தமாக 115 பேர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், மருத்துவ கண்காணிப்பில் 117 பேர் உள்ளனர்.