கண்டி பொதுச் சந்தையில் கூரிய ஆயுதத்தில் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாய்த்தர்க்கமே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸ் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.