இரண்டாம் எலிசபெத் மகாராணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அரச ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

குறித்த ஊழியர் மகாராணிக்கு உணவு மற்றும் பான வகைகளை வழங்குவது, விருந்தினர்களை மகாராணிக்கு அறிமுகப்படுத்தல், கடிதங்களையும் செய்திகளையும் மகாராணியிடம் ஒப்படைத்தல் மற்றும் மகாராணியின் நாய்களை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை முன்னெடுத்துள்ளார்.

இந் நிலையில் அரண்மனையில் சேவை புரியும் அரச ஊழியர்கள் பெரும்பாலானோரிடம் கொரோனா தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வேறு யாரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது கண்டறியப்பட்டது.

93 வயதான இரண்டாம் எலிசபெத் மாகாரணியும் அவரது கணவரும் இளவரசருமான 97 வயதான பிலிப்பும் பாக்கிங்ஹம் அரண்மனையை விட்டு வெளியேறி, விண்ட்சர் கோட்டையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மகாரணியின் புதல்வரான இளவரசர் சார்ள்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையினால் ஸ்கொட்லாந்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள,  அதேவேளை இங்கிலாந்து பிரதமர் பேரிஸ் ஜோன்சனும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இங்கிலந்தில் இதுவரை 17,000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 1,019 பேர் உயிரிழந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photo Credit : Reuterus