தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பை சிறந்த முறையில் நிறைவு செய்த ஆறாவது குழு இன்று அவர்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

மட்டக்களப்பு புனாணை மற்றும் வெலிகந்தை தனிமைப்படுத்தல் நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த 77 பேரைக் கொண்ட குழுவே இவ்வாறு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இவர்கள் இத்தாலி மற்றும் தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள். இராணுவ மற்றும் தனியார் பஸ்களில் இவர்கள் காலி, மாத்தறை, கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பூனாணை ,கண்டக்காடு, கல்கந்த மற்றும் பம்பைமடு ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இரண்டு வார கால தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 309 பேர் கொண்ட ஒரு குழுவினர், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து நேற்று காலை (28) அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றமையும் குறிப்பிடத்தக்கது.