(இரா.செல்வராஜா)

வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இலங்கைக் கிரிக்கெட் குழுவின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார ஒரு கோடி 60 இலட்சம் ரூபாவை நிதியுதவியாக வழங்கியிருக்கிறார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள வடமாகாணத்தின் உப அலுவலகத்தில் வைத்து இந்த நிதியை மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸிடம் வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் நாட்டில் பரவிவருவதன் காரணமாக இடைக்கிடையே ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வடபகுதியில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களும், அன்றாட வருமானம் பெறுபவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் கஷ்டத்தை ஓரளவாவது குறைக்கும் வகையில் முன்னாள் கிரிக்கெட் குழுத் தலைவர் குமார் சங்ககாரவினால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.

தமது நண்பர்களுடன் இணைந்து இந்த நிதியைத் திரட்டியதாக குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.