2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஆரம்பிப்பதற்கான திகதியை நிர்ணயிப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், ஜப்பான் அமைப்பாளர்களுடன் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஜூலை மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா அச்சம் காரணமாக அடுத்த ஆண்டு வரை ஒத்தி வைக்கப்பட்டது. 

பெரும்பாலும் 2021 இல் ஜூலை மாதத்தில் போட்டிகள் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டபோதிலும் அதன் ஆரம்பமாகும் திகதி இறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை. 

இந் நிலையிலேயே அந்த திகதியை நிர்ணயிப்பதற்கான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. 

பெரும்பாலும் அதன் தொடக்க விழா 2021 இல் ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photo Credit : Reuters