கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முதலாவது அரச குடும்பத்தைச் சேர்ந்தவரின் மரணம் ஸ்பெய்னில் பதிவாகியுள்ளது.

ஸ்பெய்னின் பார்பன் - பார்மா அரச குடும்பத்தின் முடிக்குரிய இளவரசியான மரியா தெரேசா (வயது-86) என்பவரே கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக டெய்லி மெயில் செய்தி வௌியிட்டுள்ளது.

இளவரசி மரியா தெரசா (வயது 86) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  உயிரிழந்துள்ளார்.

கொவிட் எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த அரச குடும்பத்தின் முதல் உறுப்பினர் இவராவார்.

அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தமை அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 73,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 5,982 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, 12,285 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.