காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணைகளை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க முடியுமானால் காணமல் போனவர்கள் குறித்து சரியாக அறிந்துகொள்ள முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வேல் பரணகம தெரிவித்துள்ளார். 

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணைகளை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

இதுவரை காலமும் காணமல் போனவர்கள் தொடர்பாக வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்து சாட்சி விசாரணைகளை முன்னெடுத்ததாகவும் இவற்றில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ள முடியாமல் போனதாகவும் அதற்கு இன்னும் ஒரு வருடம் தேவைப்படுவதாகவும் மக்ஸ்வேல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில், யுத்த கால பகுதியில் காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.