புத்தளம், கடயன்குளம் பிரதேசத்தின் ஒருபகுதியும் கண்டி, அக்குரணை பிரதேசத்தின் ஒருபகுதியும் சுகாதார அதிகாரிகளினால் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராமங்களில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானமானது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கிராமங்களில் வசிப்பவர்களையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.