புத்தளம் சாலிஹின் பள்ளி பகுதியைச் சேர்ந்த துவான் அஹமட் துவான் என்ற 50 வயதுடைய ஒருவர் இந்தோனேசியாவில் இருந்து இம்மாதம் 17ம் திகதி புத்தளத்திற்கு வருகைத் தந்துள்ளார். இந்நிலையில் குறித்த நபர் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படாமல்  இருந்த நிலையில்  நேற்று குறித்த நபருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

இதனால் அவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன்போது பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இதன்போது புத்தளம் நகரசபை, புத்தளம் பொலிஸார், மற்றும் புத்தளம் சுகாதார பரிசோதகர்கள் இனைந்து குறித்த நபரின் வீட்டிற்கு சென்று நபரின் வீட்டுக் குடும்பத்தினர்க்கு ஏப்ரல் மாதம் 12ம் திகதி வரை வீட்டை விட்டு வெளியில் வராமல் தனிமையில் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை குறித்த நபரின் வீட்டு சுவற்றில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளமைக்கான துண்டுப் பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு மேலும் தெரிவித்துள்ளனர்.