லண்டனில் இலங்கையை சேர்ந்த ஓருவர் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Feltham  பகுதியில் வசித்து வந்த 61 வயது நபரே வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டன் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்துள்ள நபர் மகரகம பகுதியை  சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.