சிறைக்கூண்டொன்றின் உணவு வழங்கும் ஜன்னலின் ஊடாக நிர்வாணமாக சிறைக்கைதியொருவர் தப்பிச் சென்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் குற்றவியல் குற்றச்சாட்டின் பேரில் ரஷ்யாவின் தென் பிரதேசத்திலுள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், சிறைக்கூண்டிலில் காணப்படும் உணவு வழங்கும் சிறிய ஜன்னலின் ஊடாக தனது ஆடைகளைக் கலைந்து தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளிப் பதிவு இணையத்தளத்தில் வெளியாகியமையினால் உலகம் முழுவதிலுமுள்ள மக்களின்  கவனத்தை ஈர்த்துள்ளது.  

இதேவேளை, 25 வயதுடைய நபரே இவ்வாறாக தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.