நியுயோர்க் நியுஜேர்சி ஆகிய பகுதிகளை தனிமைப்படுத்துவது குறித்து சிந்தித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கே முக்கிய மையம் என்பதால் அதனை தனிமைப்படுத்தவேண்டும் என சிலர் விரும்புகின்றனர்,என குறிப்பிட்டுள்ள டிரம்ப் நியுயோர்க் நியுஜேர்சி உட்பட சில பகுதிகளையும் கனெக்டிகட்டின் சில பகுதிகளையும் தனிமைப்படுத்துவது குறித்து நான் சிந்தித்து வருகின்றேன் என தெரிவித்துள்ளார்.

நாங்கள்  அதனை செய்யவேண்டிய அவசியமில்லாமலிருக்கலாம் என தெரிவித்துள்ள டிரம்ப் ஆனால் இன்று முதல் குறுகிய காலத்திற்கு - இரண்டு வாரத்திற்கு நாங்கள் தனிமைப்படுத்தலை மேற்கொள்ளக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை728 ஆக அதிகரித்துள்ள நிலையிலேயே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

டிரம்ப் முடக்கலை அறிவித்தால் 21 மில்லியன் மக்கள் வீடுகளிற்குள் முடக்கப்படுவார்கள்