பிரிட்டனில் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை 20,000ற்குள் கட்டுப்படுத்த முடியும் என்றால் அதனை வெற்றிகரமான நடவடிக்கையாக கருத முடியும் என பிரிட்டனின்  தேசிய சுகாதார சேவையின் தேசிய மருத்துவ இயக்குநர் பேராசிரியர் ஸ்டீபன் பொவிஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவும் இத்தாலியின் பாதையில் பயணிக்கின்றதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழப்புகளை 20,000ற்குள் கட்டுப்படுத்தினோம் என்றால் நாங்கள் இந்த உலகளாவிய நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயற்பட்டிருக்கின்றோம் என அர்த்தம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மரணமும் துயரம் என்றபோதிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 20,000ற்குள் கட்டுப்படுத்தினால் அது சிறந்த முயற்சியாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் நாங்கள் இது குறித்து அலட்சியமாகயிருக்ககூடாது என அவர் தெரிவித்துள்ளார்.