தமிழ்நாட்டில்  கொரோனா  அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 35 வயது நபர் ஒருவர் பெண்ணொருவரை கொலை செய்தார் என காவல்துறையினர் குற்றசாட்டு சுமத்தியுள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு விட்டு இந்தியா சென்றவேளை கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு எதிராகவே காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

வீட்டிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிர்வாணமாக வெளியே ஓடி 80 வயது பெண்மணியொருவரை கடித்துக்காயப்படுத்தினார் என தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மணிகண்டன் என்ற அந்த நபர் உளவியல் பாதிப்புகளிற்காக சிகிச்சை பெற்றவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து திரும்பி பின்னர் தனக்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட நஸ்டத்தை நினைத்து அவர் மன உளைச்சலிற்கு ஆளாகியிருந்தார் என  குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.