பிரிட்டனில் கொரோன வைரஸ் காரணமாக உறுப்புமாற்று சத்திரகிசிச்சை ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சவுதி அரேபியா சூடான் உட்பட பல நாடுகளிலும்  பிரிட்டனின் பல மருத்துவமனைகளிலும்  பணியாற்றிய அடில் எல் டயர் என்ற சத்திரகிசிச்சை ஆலோசகரே வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மார்ச்மாதம் நடுப்பகுதியில் கொரோன வைரசிற்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திய வைத்தியர் பின்னர் மருத்துவமனையில் 20 ம் திகதி அனுமதிக்கப்பட்டார் எனஅவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

63 வயதான மருத்துவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நிலையில் இறுதி நாட்களை ஐசியுவில் கழித்தார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சூடானிற்கான பிரிட்டிஸ்  தூதுவர் மருத்துவரிற்கு தனது அஞ்சலிகளை தெரிவித்துள்ளார்.