இந்தியாவின் சென்னையிலிருந்து இலங்கைக்கு மார்ச் மாதம் 14 திகதிக்குப் பின்பு வருகை தந்தவர்கள் தத்தமது பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கருக்கு குறித்து தெரிவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க  கோரியுள்ளார்.

இலங்கையில் இன்று இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இருவர் சென்னையில் இருந்து வந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, சென்னையில் இருந்து நாட்டிற்கு வந்தவர்கள் விரைவாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 113 பேர் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.