(இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மலையக அரசியல்வாதிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க பேச்சாளர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

நாள் கூலி பெறும் சாதாரண ஊழியர்கள் பொருளாதார ரீதியாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.பெருந்தோட்ட மலையக தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அனைத்து பொறுப்புக்களும் மலையக அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு சர்வ கட்சித்தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

அனைவரும் அரசியல் பேதங்களை மறந்து தற்போதைய பாரிய நெருக்கடியை வெற்றிகொள்ள ஒன்றிணைந்துள்ளோம். பொதுமக்கள் அனைவரும் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.