இலங்கையில் இன்று மேலும் மூவருக்கு கொரொனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை109 பேர் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், உலகளாவிய ரீதியில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை தாண்டியுள்ளது.  

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் குணமடைந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலக முழுவதும் 177 நாடுகளில் பரவியுள்ளது.

உலகளாவிய ரீதியில் 131,826 பேர் குணமடைந்துள்ளதுடன், 27,862 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.