"கொவிட் -19' எனப்படும் கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவின் பூனே வைராலஜி ஆய்வு நிறுவனம் கொவிட் 19 வைரஸ் எப்படி இருக்கும் என்ற  புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இதுவரையில் 5 இலட்சத்து 97 ஆயிரத்து 458 பேர் (28ஆம் திகதி அறிக்கை) உலகவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 ஆயிரத்து 370 நபர்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் கட்ட பரவல் ஆரம்பிக்கும் நிலைமை உள்ளதாகவும் சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்க மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலும் இதன் தாக்கம் மிக அதிகமாக உள்ள நிலையில் ஆசியாவிலும் இந்தியாவில் அண்மைய தினங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்தியாவில் இது வரையில் 902 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே கொவிட் -19 என அடையாளப்படுத்தப்படும் கொரோனா வைரஸ் எவ்வாறு இருக்கும் என்ற புகைப்படத்தை இந்தியாவின் பூனேயில் உள்ள வைராலஜி ஆய்வு நிறுவனம் முதல் முறையாக வெளியிட்டுள்ளது.

வைராலஜி ஆய்வு நிறுவன அறிவியலாளர்கள் மூலமாக இந்த படங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சர்வதேச ஊடகங்களில் அதிகளவில் இது குறித்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.