சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவிப்பு !

Published By: J.G.Stephan

28 Mar, 2020 | 02:10 PM
image

(நா.தனுஜா)


நாட்டில் சுகாதார நெருக்கடியொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், சிறுவர் இல்லங்களில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கு நேரடியாக உணவுப்பொருட்களைக் கையளிப்பதையும், அவர்களின் கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதையும் தவிர்க்குமாறும், அத்தகைய உதவிகள் அல்லது நன்கொடைகளை வழங்க விரும்பும் பட்சத்தில் அது குறித்து மாகாண சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் அறிவித்திருக்கிறது.

இவ்விடயம் தொடர்பில் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:


நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு நாடளாவிய ரீதியிலுள்ள சிறுவர் இல்லங்களுக்குப் பல்வேறு உதவிகளை வழங்குவதற்கு முன்வந்த ஊடக நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களைப் பாராட்டுகின்றோம்.

எமது நாட்டில் 400 சிறுவர் இல்லங்களில் சுமார் 11,500 சிறுவர்கள் வளர்கின்றார்கள். இந்த இல்லங்களில் குறைந்தபட்சம் 20 இலிருந்து அதிகபட்சமாக 100 பேர்வரை தங்கியிருக்கிறார்கள்.

எனினும் தற்போதைய சூழ்நிலையில் இந்தச் சிறார்களுக்கு உதவுவதற்காக வெளிநபர்கள் சிறுவர் இல்லங்களுக்குள் அனுமதிக்கப்படும் பட்சத்தில், அது சிறுவர்களுக்கு சுகாதார ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அச்சமுள்ளது. அதுமாத்திரமன்றி அதிக எண்ணிக்கையிலான சிறுவர்கள் இந்த இல்லங்களில் தங்கியிருப்பதும் ஆபத்தானதாகும்.

நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுவர் இல்லங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அங்கு வெளிநபர்களின் வருகை காரணமாக தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.

இந்நிலையில் சிறுவர் இல்லங்களுக்கு அவசியமான உணவுப்பொருட்களையும், ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் சதொசவின் ஊடாகப் பெற்றுக்கொடுக்குமாறு சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மாகாண ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலவரத்தைக் கருத்திற்கொண்டு ஏனைய வெளியக முகவர் நிலையங்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்வது குறித்தும் ஆராயப்படும். 

சில தனிநபர்கள் மற்றும் ஊடகங்கள் இந்தச் சிறுவர்களுக்கு உணவுப்பொருட்களையும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கிவிட்டு அவர்களின் கருத்துக்களையும், புகைப்படங்களையும் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார்கள்.

இத்தகைய செயற்பாடுகள் சிறுவர்களின் சுகாதார நன்நிலைக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், அவர்களின் மனநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அத்தோடு இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேலும் சிலர் தமது தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பது வரவேற்கத்தக்கதல்ல.

எனவே சிறுவர் இல்லங்களில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கு நேரடியாக உணவுப்பொருட்களைக் கையளிப்பதையும், அவர்களின் கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதையும் தவிர்க்கவேண்டும். அத்தகைய உதவிகள் அல்லது நன்கொடைகளை வழங்க விரும்பும் பட்சத்தில் அதுகுறித்து மாகாண சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்திற்கு அறிவிக்கவேண்டும்.

அதன்படி ஒவ்வொரு மாகாணங்களின் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள ஆணையாளர்களின் விபரம் வருமாறு:

மேல்மாகாண ஆணையாளர் - தாமரிகா (071 4404107)


மத்திய மாகாண ஆணையாளர் - சித்திகா (071 8000660)


தென்மாகாண ஆணையாளர் - மகேஷ் (071 4902800)


ஊவா மாகாண ஆணையாளர் - பிரியபாதினி (071 8079063)


சப்ரகமுவ மாகாண ஆணையாளர் - சுசிலா (071 8738962)


வடமேல் மாகாண ஆணையாளர் - பிரேமசிறி (071 4560326)


வடமத்திய மாகாண ஆணையாளர் - ராஜபக்ஷ (071 4410389)


வடமாகாண ஆணையாளர் - குருபரன் (077 8612229)


கிழக்கு மாகாணம் - ரஷ்வனி (077 9285825)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13