யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் சமையலறையில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து பாவனைக்குதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ள கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுகள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர்கள் இன்றைய தினம் முன்னெடுத்த சோதனையின் போதே அவை மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 

எனினும் ஸ்ரான்லி வீதியில் உள்ள குறித்த உணவகத்தின் பின்கதவு திறந்திருந்த நிலையில் அதற்குள் சென்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பாவனைக்குதவாத கோழி இறைச்சி, ரொட்டி மற்றும் மீன் போன்ற பல்வேறு உணவுகளை மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலையிலான குழுவினரால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.பாவனைக்குதவாத உணவுகள் உடனடியாக அழிக்கப்பட்டதோடு, அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் சஞ்சீவனால் தெரிவிக்கப்பட்டுள்ளது.