இந்தியாவில்  கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை  873 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நேற்று வெள்ளிக்கிழமை 149 புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரையில் ஒரே நாளில்  இடம்பெற்ற மிகப்பெரிய அதிகரப்பு என்று  அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மேற்கு மஹராஷ்டிரா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான 180 வைரஸ் தொற்றாளர்களும், தென் மாநிலமான கேரளாவில் 173 வைரஸ் தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.